தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில், மூன்று நாட்களுக்காவது அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கனடா பொது பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
பிரித்தானியா முதலான நாடுகளைப் போல, கனடாவும் மூன்று நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை சேகரித்துவைக்க தன் குடிமக்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
பல நாடுகள், நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகுமாறு தங்கள் குடிமக்களை அறிவுறுத்திவரும் நிலையில், கனடாவும் அத்தகைய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.
என்றாலும், மக்களை அச்சுறுத்தும் வகையில் இல்லாமல், ’அவசர காலங்களில், குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்குத் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளத் தயாராக இருக்குமாறு கனேடியர்கள் பல ஆண்டுகளாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்’ என்று கூறியுள்ளார் கனடாவின் பொது பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஸாரா மாலிக்.


