கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள் 16 நாட்கள் தாமதமாக சென்றடைந்ததால், அதை அனுப்பிய நபருக்கு 58,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியர் ஒருவர், ஜனவரி மாதம் 30ஆம் திகதி, கூரியர் மூலம் கனடாவுக்கு 10 பார்சல்கள் லட்டு அனுப்பியுள்ளார். அத்துடன், குளிர் காலத்துக்கான உடைகளும் அனுப்பியுள்ளார் அவர்.
அதற்காக இந்திய மதிப்பில் 18,400 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார் அந்த நபர்.
பார்சல்கள் பொதுவாக 10 முதல் 12 நாட்களில் கனடா சென்றடைந்துவிடுமாம். ஆனால், இந்த நபர் அனுப்பிய பார்சல்கள், 28 நாட்களுக்குப் பிறகே கனடா சென்றடைந்துள்ளன.
கூரியர் நிறுவனத்திடம் அது குறித்து விசாரித்தாலோ, அவர்கள் சரியான பதிலளிக்கவில்லையாம்.
ஆகவே, அவர் நுகர்வோர் ஆணையத்தை அணுகி புகார் செய்துள்ளார். 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்த லட்டுக்கள் உட்கொள்ள தகுதியற்றவையாக மாறிவிடும் என்றும், குளிர்கால உடைகள் குளிர்காலத்துக்குப் பிறகு கனடா சென்றடைவதால் என்ன பலன் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணையம், சம்பந்தப்பட்ட நபருக்கு கூரியர் நிறுவனம் 58,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


