Thursday, November 19, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் குறியாக்கச் சேவைகளை நிறுத்தலாம்

கனடாவில் குறியாக்கச் சேவைகளை நிறுத்தலாம்

நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டப்பூர்வ அனுமதி மசோதா (Lawful Access Bill – Bill C-22) தற்போதைய வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், தனது குறியாக்கம் செய்யப்பட்ட (encryption) சேவைகளைக் கனடாவில் இருந்து விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்க நேரிடும் என மெட்டா (Meta) நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபல சமூகவலைத்தளச் செயலிகளை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம், அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய திருத்தங்கள் பயனர்களின் தரவுகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து மெட்டாவின் கொள்கைத் தலைவர் ரேச்சல் கரன் (Rachel Curran) கூறுகையில், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், பயனர்களின் அந்தரங்கப் பாதுகாப்பும் இணையப் பாதுகாப்பும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைகளின் போது தனிப்பட்ட தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசு தரப்பில் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்கள் போதாது என்றும், குறியாக்கம் செய்யப்பட்ட தரவுகளை (encrypted data) அவை இன்னும் முழுமையாகப் பாதுகாக்கவில்லை என்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments