கனடாவில் குடும்ப வன்முறை மற்றும் துணைவர் வன்முறைச் சம்பவங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 147,030 பேர் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, துணைவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட 133,256 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புள்ளிவிபரங்களின்படி:
-
குடும்ப வன்முறை: 147,030 பேர் பாதிப்பு.
-
துணைவர் வன்முறை: 133,256 பேர் பாதிப்பு.
-
குடும்ப வன்முறை விகிதம்: ஒரு இலட்சம் பேருக்கு 357 பேர்.
-
துணைவர் வன்முறை விகிதம்: ஒரு இலட்சம் பேருக்கு 366 பேர்.
-
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடும்ப வன்முறை 1.1 சதவீதமும், துணைவர் வன்முறை 1.9 சதவீதமும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் 17 வயதுக்குட்பட்ட 27,256 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட 8,173 முதியவர்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளே குடும்ப வன்முறை மற்றும் துணைவர் வன்முறையால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எனினும், பல குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்பதால், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என Statistics Canada தெரிவித்துள்ளது


