Friday, November 6, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் கனமழை எச்சரிக்கை

கனடாவில் கனமழை எச்சரிக்கை

கனடாவின் அட்லாண்டிக் பிராந்தியத்தில் இந்த வார இறுதியில் தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

பல தாழமுக்க நிலைகள் பிராந்தியத்தை நோக்கி நகர்வதால், வெள்ளிக்கிழமை முதல் வார இறுதி முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நோவா ஸ்கோஷியாவின் தென்மேற்குப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை ஆரம்பமாகி, மாலைக்குள் மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதால், மழைவீழ்ச்சி அதிகரித்து சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதேவேளை, தெற்கிலிருந்து வீசும் வெப்பமான காற்றின் காரணமாக நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை மீண்டும் 20 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றுத் தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில் பிரெடெரிக்டன் நகரில் இதுவரை எட்டு தடவைகள் மாத்திரமே 20 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இறுதியாக 2024ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி இவ்வாறான வெப்பநிலை பதிவாகியிருந்தது.

சனிக்கிழமைக்குள் கடல்சார் மாகாணங்கள் அனைத்திலும் மழை பரவக்கூடும். ஞாயிற்றுக்கிழமை மழை நியூஃபவுண்ட்லாந்து நோக்கி நகர்ந்து, பின்னர் கடல்சார் மாகாணங்களில் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி:

  • நோவா ஸ்கோஷியா, தெற்கு நியூ பிரன்ஸ்விக் மற்றும் நியூஃபவுண்ட்லாந்தின் பேர்ஜியூ கரையோரப் பகுதிகள்: 50 – 80 மில்லிமீற்றர்.
  • மத்திய நியூ பிரன்ஸ்விக் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு (PEI): 30 – 50 மில்லிமீற்றர்.

தொடர்ச்சியான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக சில பகுதிகளில் உள்ளூர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments