Thursday, October 1, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் மேனிடோபாவில் பாம்புகளினால் ஏற்பட்ட தொல்லை

கனடாவின் மேனிடோபாவில் பாம்புகளினால் ஏற்பட்ட தொல்லை

கனடாவின் மேனிடோபா மாகாணத்திலுள்ள ‘இன்டர்லேக்’ சமூகப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான பாம்புகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எரிக்சுடேல் கர்லிங் கிளப்பின் தலைவரான 79 வயதான லாரி வெதர்பர்ன் இது குறித்துக் கூறுகையில், தமது பகுதியில் ‘கார்ட்டர்’ வகை பாம்புகள் கட்டுக்கடங்காமல் எங்கும் நிறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாகத் தினமும் வாலியொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பல பாம்புகளைப் பிடித்து அகற்றி வருவதாகவும், ஒரே நாளில் 30 பாம்புகள் வரை பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கர்லிங் விளையாட்டு அரங்கில் மட்டுமன்றி, பாடசாலை நிர்வாக அலுவலகம், முதியோர் இல்லம், இசைக்கடை மற்றும் குடியிருப்பு வீடுகள் என அனைத்து இடங்களிலும் பாம்புகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தனது வாழ்நாளில் இவ்வளவு அதிகமான பாம்புகளைப் பார்த்ததே இல்லை என்றும், இதுவே மிக மோசமான ஆண்டு என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் பாம்புகள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நகராட்சியினால் இவற்றிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மேற்கு இன்டர்லேக் நகராட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி கெரி கேம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

பாம்புகள் நெடுஞ்சாலைகள், வீடுகளின் முற்றம், பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் நுழைந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

குளிர் அதிகரித்து வெப்பநிலை குறையும் வரை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இந்த நிலைமை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments