Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கண்களில் மிளகாய் தூளை தூவி வழிப்பறி கொள்ளை ; தந்தை, தாய், மகன் கைது!

கண்களில் மிளகாய் தூளை தூவி வழிப்பறி கொள்ளை ; தந்தை, தாய், மகன் கைது!

பல்வேறு பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மஹவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்களான தாயும் மகனும் குருணாகல் – வாரியப்பொல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபரான தந்தை பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் பின்னர் தலதாகம – மஹவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய தந்தையும் 22 வயதுடைய தாயும் 15 வயதுயைட மகனுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கண்களில் மிளகாய் தூளை தூவி அவர்களிடம் உள்ள பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் செல்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments