Thursday, November 19, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி

ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி

 

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பல மறக்க முடியாத வெற்றிகள், சவாலான காலக்கட்டங்கள் என ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பாக விளங்கிய எம்.எஸ். தோனி, தற்போது அணியின் ஆலோசகராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

அணியை வெற்றிகரமாக முன்னின்று நடத்திய தோனி, இனிவரும் காலங்களில் சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைமுறை வீரர்களை வழிகாட்டி உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தல தோனி எப்போதும் சிஎஸ்கே அணியின் அடையாளமாகத் தொடர்வார் எனவும், சென்னை எப்போதும் அவரது சொந்த வீடுதான் எனவும் அணி நிர்வாகம் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments