Thursday, September 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவுக்கு அழைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவுக்கு அழைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைய கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு நேற்று (17) அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, முதல் இணை உறுப்பினராக இணையுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பை வரவேற்றுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசுகையில்,

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலால் ஏற்படும் அழுத்தங்களால் இருதரப்புக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வர்த்தகம், செய்யறிவு, விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முதன்முதலாக கனடாவுக்கு முன்மொழியப்பட்ட இணை உறுப்பினர் எனும் பதவியின் விவரங்கள் குறித்த முழுமையாக தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்பினர் பதவியைக் கோரவில்லை என பிரதமர் கார்னி கூறியுள்ளார்.

கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.

கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவதாலும், அதிகப்படியான வர்த்தக வரிகளாலும் ஐரோப்பா உடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை கனடா அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments