இந்த விபத்து ஏ – 9 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர்.
தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறை நோக்கி மரக்கறி ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கனகராயன்குளம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


