Sunday, July 5, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி

இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

மென்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் வைபவ் சூர்யவன்ஷி நேற்றைய போட்டியின் ஊடாக சர்வதேச போட்டியில் 15 ஆவது வயதில் அறிமுகமாகி, சச்சினின் 36 வருட கால சாதனையை தகர்த்துள்ளார்.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக 16 வயதில் சர்வதேச கிரிக்கட்டில் அறிமுகமானமையே சாதனையாக இருந்தது.

நேற்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

பின்னர், 191 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

ஜேகப் பெத்தல் அதிகபட்சமாக 76 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments