இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பயணித்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த நால்வர் கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் செருக்கும் பாலேனி பகுதியைச் சேர்ந்த சாய்குமார், கோட்டா காமேஸ்வரம்மா உள்ளிட்டோர் பெங்களூருவில் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று இரவு காரில் தமது சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை பிரகாசம் மாவட்டத்தின் தங்கூரு சுங்கச்சாவடியை கார் சென்றடைந்தபோது, சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக முன்னால் நின்றிருந்த பேருந்தின் பின்னால் கார் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அதிவேகமாக வந்த லொறியொன்று காரின் பின்னால் மோதியதில், கார் பேருந்துக்கும் லொறிக்கும் இடையில் சிக்கி முற்றாக நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த சாய்குமார், கோட்டா காமேஸ்வரம்மா உள்ளிட்ட மூ


