Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இந்தியாவின் காஸ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி.

இந்தியாவின் காஸ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி.

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநில பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த 30ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது.

இந்திய தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோருடன் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் பெயர் பொறிக்கப்பட்ட கல் வெட்டிற்கு மலர் தூபி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments