Wednesday, September 9, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இங்கிலாந்து பந்துவீச்சில் நிலைகுலைந்த பாகிஸ்தான்!

இங்கிலாந்து பந்துவீச்சில் நிலைகுலைந்த பாகிஸ்தான்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடியால் பாகிஸ்தான் அணி முற்றிலும் நிலைகுலைந்துள்ளது!

எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய போட்டியில், முதல் நாளின் மதிய உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது.

ஜோஷ் டங் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆலி ராபின்சன் சைம் அயூப்பின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

3 அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

பாபர் அசாம் வெறும் 7 ரன்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

15 ஓவர்களிலேயே பாகிஸ்தான் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் சவுத் ஷகீல் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

மற்றொரு அறிமுக வீரர் ரசாவுல்லா 11 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments