Tuesday, September 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு - தாழ்நில மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு – தாழ்நில மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இன்றைய தினமும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யுமானால், அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் சில பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், களனி கங்கையின் நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நில்வலா, கிங், களனி, களு, அத்தனகலு மற்றும் பெந்தர ஆகிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments