Monday, September 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்“ஆதாரங்களை பக்கத்திலேயே வைத்திருக்கிறோம்” – முதல்வர் விஜய்

“ஆதாரங்களை பக்கத்திலேயே வைத்திருக்கிறோம்” – முதல்வர் விஜய்

எதைப் பற்றி பேசினாலும் ஆதாரம் கேட்கும் எதிர்க்கட்சியினர், அந்த ஆதாரங்களை அருகிலேயே வைத்துக்கொண்டு கேள்வி எழுப்புவதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பொலிஸ் மற்றும் சட்டம் – ஒழுங்கு தொடர்பான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது, தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

ஆதாரம் கேட்பவர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்றும், சட்டப்பேரவை நூலகத்திலேயே சர்காரியா ஆணையத்தின் அறிக்கை தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மேலும், அமுலாக்கத்துறை விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வந்த மதுபான விடுதிகளில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டதாகக் கூறிய விஜய், இது தொடர்பாக “கரூர் குழு” என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள மக்களுக்கும் ஆர்வம் இருப்பதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments