Tuesday, October 6, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அவுஸ்திரேலிய நகரை தாக்கிய சூறாவளி

அவுஸ்திரேலிய நகரை தாக்கிய சூறாவளி

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள உல்லடுல்லா நகரை தாக்கிய திடீர் சூறாவளியால் வீடுகள், தோட்டங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

சிட்னிக்கு தெற்கே சுமார் 226 கிலோமீற்றர் தொலைவில் உள்ள உல்லடுல்லாவை நேற்று (3) பிற்பகல் தாக்கிய சூறாவளியின்போது, வெளிப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

பலத்த காற்று மற்றும் மழையால் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததுடன், கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் இவ்வாறான சூறாவளி ஏற்படுவது மிகவும் அரிதானது என அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவும் கடும் புயல் மற்றும் மழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிட்னியிலும் கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments