Thursday, November 5, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தோல்வி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தோல்வி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் வெளியாகும் முடிவுகளை முழுமையாக ஏற்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயார் என ட்ரம்ப் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து செயற்படவும் தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நாம் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவோம். அவர்களுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம் பெரும்பாலும் எம்மால் ஏதேனும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியும்” என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை ஜனநாயக் கட்சி கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் வசம் இருந்த இந்த செனட் சபையின் பெரும்பான்யை பெறுவதற்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments