Sunday, November 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம் முடிவுக்கு வந்தது!

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம் முடிவுக்கு வந்தது!

அமெரிக்காவில் பல மணிநேரங்களாக நீடித்த விமானப் போக்குவரத்து முடக்கம் நீக்கப்பட்டதுடன் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட “தகவல் தொடர்புச் சிக்கல்” காரணமாக, நாடு முழுவதும் புறப்படவிருந்த விமானங்கள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ​​இந்தத் தடையை அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) நீக்கியுள்ளது.

நேற்று மாலை 3:54 மணிக்கு (GMT நேரம் 20:54) விமானப் போக்குவரத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்த FAA, அதே நாள் இரவு 8:15 மணிக்கு (சனிக்கிழமை GMT நேரம் 01:15) அந்த உத்தரவை நீக்கியதாக அறிவித்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments