Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெலிகந்த பகுதியில் புதையல் தோண்டிய இளைஞன் கைது

வெலிகந்த பகுதியில் புதையல் தோண்டிய இளைஞன் கைது

பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹிந்தகம பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் வெலிகந்த பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகந்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிகந்த – அசேலபுர பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments