முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019.04.21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார்.
இதனையடுத்து, விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


