Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விபத்தில் சிக்கி உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல்!

விபத்தில் சிக்கி உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல்!

மாத்தறை – திக்வெல்ல நகரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண திக்வெல்ல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

திக்வெல்ல நகரத்தில் கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் ஜூன் மாதம் 28 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமுடைய வயோதிபர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தின் 071 – 8591438 அல்லது 041 – 2255222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments