லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்,இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி 165 ஓட்டங்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 159 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. நட்சத்திர பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ 4 ஓவரில் வெறும் 21 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் மொயின் அலி 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் அடித்தார்.
160 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓவரில் 165 ஓட்டங்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய சிம்மன்ஸ் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உதவியுடன் 53 பந்தில் 77 ஓட்டங்கள் விளாசினார்.
மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தது.
இதேவேளை, டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வானார்.
லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் 2026 தொடரானது கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் தொடங்கி நடைபெற்றுவந்தது.
இதில் இந்தியா சாம்பியன்கள், பங்களாதேஷ் சாம்பியன்கள், அவுஸ்த்திரேலியா சாம்பியன்கள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்கள் என 6 லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று தொடரிலிருந்து வெளியேறியது.


