தமிழ்நாடு போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாறி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநிலத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜாமினில் வெளியே வந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், சிவகங்கையில் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த மதன் என்பவர் கொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பெருந்துறை அருகே செவிலியர் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வேதாரண்யத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் ஒருவர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், அதே மாவட்டத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த பூபாலன் கைது செய்யப்பட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் முறையாகக் கண்காணிக்கப்படுகிறார்களா என்றும், ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பதால் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏற்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மு.க. ஸ்டாலின் தனது பதிவில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


