Tuesday, October 6, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ராகுல் போராடும் இடத்திலிருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம்

ராகுல் போராடும் இடத்திலிருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் அகில இந்தியா வானொலி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களை காவல்துறை வெளியேற்றி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் இன்று தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணிக்கு திட்டமிடப்பட்டது.

அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் நீதி ஆயோக் அலுவலகத்திற்கு முன்னே அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அகில இந்திய வானொலி அலுவலகத்துக்குள் (ஆகாஷ்வானி பவன்) நுழைந்து தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:

”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்களை சந்திக்க விரும்பினோம். ஆனால், காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்திவிட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாங்கள் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டோம் எனத் தெரியவில்லை. தேர்தல் ஆணைய அலுவலகம் வெறும் 50 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், இவர்கள் ஏற்படுத்தும் சிக்கலை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எங்களைச் சந்திக்க ஞானேஷ் குமார் பயப்படுவது ஏன்? தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்தல் ஆணையம் சந்திக்கவில்லை என்றால், ஜனநாயகத்திற்கு என்ன அர்த்தம்? ஜனநாயகத்தைக் காக்கவே நான் இங்கே நிற்கிறேன். ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் இங்கு வந்திருந்தனர்.

அமித் ஷா, நரேந்திர மோடி, மோகன் பகவத் மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைத்துவிட்டனர். நாட்டு மக்களும் இளைஞர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் ‘வாக்குத் திருட்டு’ மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர்; ஞானேஷ் குமார் அவர்களுக்குத் துணை நின்றார். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல் தேசத்துரோகம். யாரும் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, அகில இந்தியா வானொலி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments