Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம் !

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம் !

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பேருடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகில், 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்கியுள்ளனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருக்கின்றனர்.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

படகிலிருந்து மீட்கப்பட்டவர்களை, திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments