Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு ; ஒருவர் பலி ; இருவர் காயம்!

மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு ; ஒருவர் பலி ; இருவர் காயம்!

மாரவில, முதுகடுவ கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மூவரை மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்ய மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments