Tuesday, November 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மலைப்பாம்புடன் விளையாடிய சிறுவர்கள்!

மலைப்பாம்புடன் விளையாடிய சிறுவர்கள்!

இந்தோனேசியாவில், சிறுவர்கள் சிலர் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றுடன் அச்சமின்றி விளையாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

குறித்த காணொளியில், சிறுவன் ஒருவன் மலைப்பாம்பின் தலையைப் பிடித்து தரையிலிருந்து தூக்குவதையும், மற்றொரு சிறுவன் அதன் வாலைப் பிடித்து இழுத்துச் செல்வதையும் காண முடிகிறது.

இதற்கிடையில், ஒரு சிறு குழந்தையும் அந்தப் பாம்புக்கு அருகில் ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

பெரிய மலைப்பாம்புடன் சிறுவர்கள் இவ்வாறு ஆபத்தான முறையில் விளையாடும் காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

மலைப்பாம்புகள் ஆபத்தான வனவிலங்குகளாக இருப்பதால், அவற்றைத் தொடுவதையோ கையாளுவதையோ தவிர்த்து, பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments