Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்காமல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசாங்கம் - சஜித் பிரேமதாச

மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்காமல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசாங்கம் – சஜித் பிரேமதாச

நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். இலவச சுகாதாரம் என்பது மக்களின் மனித உரிமையாகும். இலவச சுகாதார கட்டமைப்பினுள் வினைதிறனான சேவைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட்டாலும், இத்தருணத்தில் நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதே இதற்குக் காரணமாகும். புற்றுநோய் நோயாளிகள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கும், வலி நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கடுமையான தட்டுபாடு நிலவுகின்றன. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 180 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவுகிறது.

மருத்துவமனை கட்டமைப்பில் நிலவும் மருந்து தட்டுபாட்டுப் பிரச்சினைய பாராளுமன்றத்தில் நான் முன்வைத்தேன். இலவச சுகாதாரப் பராமரிப்பின் கீழ் அரச மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் நோயாளர்களுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை.

தனியார் மருத்துவ நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு மருந்துகளைப் பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை இலவச சுகாதார சேவையாக கருத முடியாது. மாறாக கட்டணம் செலுத்தும் சுகாதார சேவையாகவே காணப்படுகின்றன.

நமது நாட்டின் நலன்புரி பொருளாதாரம் மற்றும் நலன்புரி அரசில் இலவச சுகாதார சேவைகளை திறம்பட செயல்படுத்த அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் முழு மூச்சோடு பாடுபட வேண்டும்.

மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் இந்த அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருகின்றது. அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காத ஒரு கொள்கையையே பின்பற்றி வருகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் வினவப்பட்டாலும், அரசாங்க தரப்பில் இருந்து இதற்கு எந்த தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களை உயிருடன் வைத்திருக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

பல ஆண்டுகளாக நடைமுறையில் காணப்படும் விலைமனு செயல்முறையை மட்டும் சுட்டிக்காட்டாமல், இந்த மருந்துப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்படுவதனால், மனித உயிர்களைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments