Wednesday, November 18, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மனிடோபா அரசு புதிய திட்டம்!

மனிடோபா அரசு புதிய திட்டம்!

மனிடோபா மாகாணத்தில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் சுயாதீன மாற்றுத்திறனாளி ஆலோசகர் அமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

18 வயதை அடைந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுச் சேவைகள் நிறுத்தப்படுவது தொடர்பாக எழுந்த மனித உரிமைப் புகாரைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டு உயிரிழந்த அமெலியா ஹாம்டன் என்ற இளம் பெண்ணின் குடும்பத்தினர் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே புதிய அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான 13 பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments