Sunday, September 27, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மதுரையில் நாளை தொடங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்

மதுரையில் நாளை தொடங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் நாளை (செப்டம்பர் 28) மதுரையில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சார்பில் குழந்தைக்கு சீர் வழங்கும் வழக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டத்திற்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. 2026 ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த தகுதியான குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.

முதற்கட்டமாக சுமார் 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், 107 அரசு மருத்துவமனைகள் மூலம் அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் நடைபெறும் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் சில குழந்தைகளுக்கு நேரடியாக தங்க மோதிரங்களை அணிவிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து பிரசவ வார்டுக்குச் சென்று அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முதலமைச்சர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் பார்வையிட உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments