Thursday, September 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சமீபத்திய மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஸ்ரீ சரணி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன்,இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தீப்தி சர்மா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். இதில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இவ்வாறு ஆசியக் கோப்பையில் வெளிப்படுத்தி வரும் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments