2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் 4-5 பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா படேல், சீனாவின் ஜாங் பியானை எதிர்கொண்டார்.
இதில் 7-11, 5-11, 7-11 என்ற செட் கணக்கில் பவினா தோல்வியடைந்தார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த அவர், வெண்கலப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 24ஆம் திகதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.


