மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்தனர்.
இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அந்த இடத்திலேயே அசைவற்று காணப்பட்டார்.
அதன்பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


