Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பேருவளையில் வீ்டொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

பேருவளையில் வீ்டொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

களுத்துறையில் பேருவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதனாகொடகம பிரதேசத்தில் உள்ள வீ்டொன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை, பதனாகொடகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலமானது குறித்த வீட்டில் உள்ள கட்டில் மேல் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments