Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பேரிடர் காரணமாக இதுவரை 132 பேர் பலி!

பேரிடர் காரணமாக இதுவரை 132 பேர் பலி!

நாட்டைப் பாதித்துள்ள தீவிரமான வானிலை மற்றும் அனர்த்தங்களினால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 176 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிவரையான தகவல்களின்படி, நாடு முழுவதும் 179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தம் காரணமாக அதிகளவில் கண்டி மாவட்டத்தில் 52 உயிரிழந்துள்ளதுடன் 105 பேர் காணாமல் போயுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் மாத்தளை மாவட்டத்தில் எட்டு பேரும் குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 78,010 பேர், நாடு முழுவதும் உள்ள 716 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments