Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பெங்களூரு அணியின் கோப்பை பேரணி ரத்து

பெங்களூரு அணியின் கோப்பை பேரணி ரத்து

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி, 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக, அதாவது 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் பெங்களூரு அணி வீரர்கள் கோப்பையுடன் , பெங்களூரு விதான் சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரை திறந்தவெளி பஸ் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் கோப்பை பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.. சின்னசாமி மைதானத்தில் மாலை 5 மணிக்கு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments