Sunday, March 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்புட்டின் நெருப்புடன் விளையாடுகின்றார் - டிரம்ப்

புட்டின் நெருப்புடன் விளையாடுகின்றார் – டிரம்ப்

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நெருப்புடன் விளையாடுகின்றார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் இல்லாவிட்டால் ரஸ்யாவிற்கு நிறைய மோசமான விடயங்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை விளாடிமிர் புட்டின் உணரத்தவறுகின்றார் என தெரிவித்துள்ள டிரம்ப் புட்டின் நெருப்புடன் விளையாடுகின்றார் என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தான் இல்லாவிட்டால் ரஸ்யா எதிர்கொண்டிருக்ககூடிய மோசமான விடயங்கள் என்னவென்பது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.

வார இறுதியில் புட்டின் மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படையில் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பது குறித்து டிரம்ப் ஆராய்ந்து வருகின்றார் என தெரிவித்துள்ள சிஎன்என் உட்பட அமெரிக்க ஊடகங்கள் எனினும் டிரம்ப் தனதுமனதை மாற்றிக்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளன.

மொஸ்கோவிற்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments