Thursday, March 12, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பிரம்மாண்டமாக தொடங்கிய 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை

பிரம்மாண்டமாக தொடங்கிய ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை

2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இத்திரைப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. படத்தின் செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15-ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் காலை மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments