Friday, March 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பரபரப்பான சூழலில் மக்களவையில் இன்று தாக்கலாகும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா

பரபரப்பான சூழலில் மக்களவையில் இன்று தாக்கலாகும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசுகிறார்.

மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை, மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பகல் 12 மணிக்கு மசோதாவை தாக்கல் செய்து பேச உள்ளார். இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது அவையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இருக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அவர்கள் தற்போது 3 நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்றுள்ளார். இன்று டெல்லி திரும்பும் அவர், அவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்.

இதைத் தொடர்ந்து இன்று இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் அதனை கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜனதாவின் அனைத்து எம்.பி.க்களுக்கும் கொறாடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments