Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பண்டாரகமை - களுத்துறை வீதியில் விபத்து ; முதியவர் பலி!

பண்டாரகமை – களுத்துறை வீதியில் விபத்து ; முதியவர் பலி!

பண்டாரகமை – களுத்துறை வீதியில் மாரகஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.

களுத்துறையிலிருந்து பண்டாரகமை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது படுகாயமடைந்த முதியவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பண்டாரகமை பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய முதியவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments