Tuesday, September 1, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நேபாள சுரங்க மீட்புப் பணியில் இந்திய நிபுணர் குழு இணைவு

நேபாள சுரங்க மீட்புப் பணியில் இந்திய நிபுணர் குழு இணைவு

நேபாளத்தில் வெள்ளத்தால் நீர்மின் நிலையப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், அந்நாட்டு இராணுவத்துடன் இணைந்து இந்திய சுரங்க மீட்பு நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளுக்கு அருகிலுள்ள நீர்மின் நிலையங்களில் பலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க உதவுவதற்காக இந்திய சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணர் குழு ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர்மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நேபாள இராணுவத்துடன் இணைந்து இந்திய நிபுணர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், இந்தியாவிலிருந்து மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 68.5 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மரபணு பரிசோதனைகளுக்கு உதவ தடயவியல் நிபுணர் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments