Thursday, July 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கண்டி – பன்வில, நக்ள்ஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள், நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர்.

13 மற்றும் 14 வயதான இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 02 மாணவர்களும், நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயற்சித்த போதே, கீழே வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன், மற்ற மாணவன் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது.

இதன்போதே, குறித்த 02 மாணவர்களும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments