Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நால்ல பகுதியில் விபத்து ; பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

நால்ல பகுதியில் விபத்து ; பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

கொழும்பு – குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 03 பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments