Tuesday, September 22, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது! UNIFIL தெரிவிப்பு

தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது! UNIFIL தெரிவிப்பு

தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது என்று லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை (UNIFIL) கூறியுள்ளதுடன், மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அரசியல் உறுதிப்பாடு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இந்தக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

தெற்கு லெபனானின் நக்கூரா நகரில் உள்ள தனது தலைமையகத்தில், UNIFIL நேற்று(21) ஒரு விழாவுடன் இந்த தினத்தைக் கொண்டாடியது.

இதன்போது,லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை “இன்று தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது, ஆனால் அமைதிக்கான நம்பிக்கை நீடிக்கிறது. நீடித்த அமைதிக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தே அரசியல் உறுதிப்பாடுகளும் தீர்வுகளும் தேவை என்று வலியுறுத்தியது.

அமைதிப் படையினர் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், தவறான புரிதல்களைத் தவிர்க்கவும், பதற்றம் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவ முடியும். ஆனால், மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான அரசியல் உறுதிப்பாட்டையும் முடிவுகளையும் அவர்களால் ஈடுசெய்ய முடியாது என்று கூறியது.

UNIFIL பணித் தலைவர் மற்றும் படைத் தளபதி டியோடடோ அபக்னாரா, அமைதி என்பது “ஆண்டுக்கு ஒருமுறை நாம் கையாளும் ஒரு விஷயம் அல்ல. அது ஒரு நீடித்த பொறுப்பு என்று கூறினார்.

ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பொறுப்பு அனைத்துத் தரப்பினரையும் சார்ந்தது என்றும், அதே சமயம் UNIFIL தனது பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றும். அதாவது, தகவல் தொடர்பைத் திறந்த நிலையில் வைத்திருத்தல், பதற்றம் அதிகரிப்பதற்கான அபாயத்தைக் குறைத்தல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றைச் செய்யும் என்றும் அபக்னாரா வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments