Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று தீப்பற்றி எரிந்தது ; மூவர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று தீப்பற்றி எரிந்தது ; மூவர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (11) ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவையிலிருந்து பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதையடுத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தின் போது மூவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments