Sunday, September 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கிராமப்புற நகரமொன்றில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாவது சம்பவம் இரவு சுமார் 9.30 மணியளவில் மதுபான விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. அங்கு நுழைந்த ஆயுததாரிகள் வாடிக்கையாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் AK-47 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகவும், சில வாடிக்கையாளர்களின் கையடக்கத் தொலைபேசிகளைப் பறித்துக்கொண்டு இரண்டு வாகனங்களில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது இரண்டு வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

மற்றொரு சம்பவம் கேப் டவுன் நகருக்கு அருகிலுள்ள லுவாண்ட்லே பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள உணவகப் பகுதியில் நுழைந்த ஆயுததாரிகள் வாடிக்கையாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் தென்னாப்பிரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments