Tuesday, September 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தின் முதலாவது நாள் நினைவேந்தல் நிகழ்வு, இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று (15) நடைபெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments