Monday, June 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்திபெத்தில் 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்

திபெத்தில் 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்

திபெத்தில் காலை 11.01 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நேற்றிரவு 9.48 மணியளவில் இதே அளவு ஆழத்தில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

அது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. இதனால், திபெத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. திபெத் பீடபூமியானது, டெக்டோனிக் தட்டுகளின் மோதலால் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக அறியப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments