Friday, March 13, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்"தளபதி 69" பட தலைப்பு குடியரசு தினத்தில் பதிவேற்றம்?

“தளபதி 69” பட தலைப்பு குடியரசு தினத்தில் பதிவேற்றம்?

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் “தளபதி 69” என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது. அவ்வப்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு சார்ந்த தகவல்கள் மட்டும் வெளியாகி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏதேனும் ஒரு அப்டேட் கிடைக்கும் என ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் பதிவேற்றம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தளபதி 69’ படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments